Categories
சினிமா தமிழ் சினிமா

வெந்து தணிந்தது காடு….. மல்லிகை பூ பாடல்…. நடன இயக்குனர் பிருந்தா நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடினார்கள். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது.

அதுவும் மல்லிப்பூ என்று தொடங்கும் பாடல் ரசிகர்கள் மட்டுமில்லாத அனைவரின் முணுமுணுப்பாக இருந்தது. இந்நிலையில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் இடம் பெற்றுள்ள மல்லிகை பூ என்ற பாடல் குறித்து அந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய பிருந்தா நெலிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், மல்லிப்பூ பாடலின் நினைவு. இந்த பாடலுக்காக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிகவும் அழகான நடன கலைஞர் சிம்புவுக்கு நன்றி. இந்த பாடலை ஒரே ஷாட்டில் முடித்த உடனே பாடலுக்கான வரவேற்பை பார்த்தேன். நீங்கள் அனைவரும் பாடலை விரும்புவீர்கள் என்று எனக்கு தெரியும். இதற்கான காரணம் ஏ.ஆர்.ரகுமான் ஐயாவின் மந்திர இசை என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |