Categories
அரசியல்

நவராத்திரிக்கு வீட்ல கொலு வைப்பீங்களா…..? அலங்காரம் சூப்பரா இருக்க….. இதோ அருமையான டிப்ஸ்….!!!!

நவராத்திரி என்பது 9 நாட்கள் நடைபெறும் ஒரு பண்டிகை. இந்த நவராத்திரியில் கொலு வைப்பது தான் முக்கியமானது. எனவே இந்த நாட்களில் அனைத்து வீடுகளிலுமே கொலு பொம்மைகளை வாங்கி வைத்து வீட்டில் அலங்காரம் செய்து விதவிதமான பலகாரங்கள் செய்து கடவுளுக்கு படைத்து வழிபடுவார்கள். அதிலும் இந்த நவராத்திரி பெண்கள் பொற்றுதற்குரிய ஒரு முக்கியமான நாள் என்று கூட சொல்லலாம். ஏனெனில் இந்த நாட்களில் பெண்கள் வீட்டில் கொலு அமைத்து பூஜை செய்து வருவார்கள்.

மேலும் இந்த நாட்களில் பெண் தெய்வங்களான லட்சுமி, சரஸ்வதி, துர்க்கையை போற்றும் விதமாக வீட்டில் கொலு அமைத்து பொம்மைகளை வாங்கி அடுக்கி தெய்வத்தை வீட்டிலேயே குடியிருக்கும் விதமாக அலங்காரங்களை செய்வார்கள். இப்போது இந்த கொலு பொம்மை வைத்து பூஜை செய்யும் அலங்காரத்திற்கான ஒரு சில குறிப்புகள் குறித்து இப்போது பார்க்கலாம். கொலு பொம்மைகளில் தூசி ஏதேனும் இருந்தால் அதன் மேல் மண்ணெண்ணெய் தடவி விபூதியால் துடைத்து வைத்தால் கொலு பொம்மைகள் பளிச்சென்று இருக்கும். கொலுவை வைக்கும் போது அங்கு மலையையும் செய்வார்கள்.

அப்படி மலை செட் பண்ணம்பொழுது ஒரு தகர டப்பாவை கவிழ்த்து வைத்து அதனுள் சாம்பிராணியை எரிய வைத்தால் மலை தேவலோகத்தில் வரும் புகை போல காட்சி அளிக்கும். மேலும் அந்த இடமும் வாசனையாக இருக்கும். ஒரு சிலர் தெப்பக்குளம் அமைப்பார்கள். அவ்வாறு அமைக்க ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிய வாத்து பொம்மை, கலர் கலரான தெர்மாக்கொல், ஜிகினா ஆகிஎவற்றை தூவினால் குளம் நன்றாக ஜொலிக்கும். கொலுவில் ஒரு சிலர் பூங்காவை வைப்பார்கள். அவ்வாறு பூங்கா வைக்கும் பொழுது அங்கு செடிகள் வளர்ந்து இருப்பது போல் இருக்க கடுகு கேழ்வரகு இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைத்து பிறகு சிறிய டப்பாவில் மண்ணை போட்டு அதன் மேல் இந்த கடுகு மற்றும் கேழ்வரகு தூவினால் சீக்கிரம் முழைத்துவிடும்.

செடி போன்றும் அழகாக தெரியும். படிகள் அமைக்கும்போது இரண்டு ஓரங்களிலும் அழகாக இருப்பதற்காக வீட்டில் உள்ள காலியான ஸ்ப்ரே பாட்டில் மீது கலர் பேப்பரை சுற்றியோ அல்லது அந்த டப்பாவின் மேல் பசையை தடவி பிறகு முத்துக்களை ஒட்டவைத்து பின் அதனுள் பூங்கொத்துக்களை வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தரையில் பச்சை பசேல் என்று புல்வெளி அமைக்க வேண்டும் என்றால் வீட்டில் தேங்காய் பால் எடுத்த தேங்காய் சக்கையை பச்சை கலர் பவுடரில் கலந்து பரப்பினால் புல்வெளிகள் போன்று காட்சிகளையும்.

Categories

Tech |