நம் நாட்டில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகை தான் நவராத்திரி.ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 10 நாட்கள் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.ஒன்பது இரவுகள் மற்றும் 10 நாட்கள் என்று கொண்டாடப்படும் நவராத்திரியில் துர்கா தேவியின் அவதாரங்கள் வழிபடப்படுகின்றது.
தீமைக்கு எதிரான நன்மை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இந்த பண்டிகை உள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு விதமாக துர்கா தேவியை வழிபாடு செய்வது நவராத்திரியில் நடைபெறும். இந்து புராணங்களின்படி அரக்கர்கள், அரசன் மற்றும் மகிஷாசுரன், மூன்று லோகங்களான பூமி, சொர்க்கம் மற்றும் நரகத்தை தாக்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நேரத்தில் அவனை மதம் செய்ய மாபெரும் சக்தி ஒன்று தேவைப்பட்டது.
அதற்கான காரணம் படைக்கும் கடவுளான பிரம்மா ஒரு பெண்ணால் மட்டுமே மகிஷாசுரனை வீழ்த்த முடியும் என்று வரம் அளித்தது தான். அதனால் மும்மூர்த்திகளான பிரம்மா,விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும் தங்களின் சக்திகளை ஒருங்கிணைத்து அரக்கர்கள் அரசனான மகிஷாசுரனை பதம் செய்ய துர்கா தேவியை அதாவது பராசக்தியை உருவாக்கினர்.
அவர்தான் மகிஷாசுரனை அளித்தார் என்ற இந்து புராணங்கள் கூறுகிறது. கிட்டத்தட்ட 15 நாட்கள் நீண்ட போருக்கு பின்னர் பராசக்தி அவனை மாளைய அமாவாசை என்று திரிசூலத்தால் வதம் செய்துள்ளார். அதற்குப் பிறகு வந்த ஒன்பது நாட்களுக்கு பராசக்தியை 9 வெவ்வேறு வடிவங்களில் மற்றும் அவதாரங்களில் வழிபடத் தொடங்கினார்கள். இவ்வாறு தான் நவராத்திரி ஒன்பது நாட்கள் சிறப்பு உருவானது.