Categories
தேசிய செய்திகள்

“இணையத்தில் லீக்கான மாணவிகளின் குளியல் வீடியோ” போராட்டம் வாபஸ்…. 6 நாட்களுக்கு விடுமுறை….!!!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மெகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகர்  பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் சில மாணவிகளின் குளிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று முன்தினம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவிகளின் கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக் கொண்டதால், செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் 6 நாட்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று முன்தினம் ஆரம்பித்த மாணவிகளின் போராட்டம் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் கைவிடப்பட்டது. அதோடு விடுதிகளில் உள்ள அனைத்து வார்டன்களும் இடமாற்றம் செய்யப்பட்டதோடு, விடுதி நேரங்களும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் மாணவிகளின் ஆபாசமான வீடியோக்களை தயாரித்து வெளியிட்டதாக கூறி பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவி, அவருடைய ஆண் நண்பர் மற்றும் 33 வயதுடைய  நபர் என 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |