ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஐ.பி.எஸ்.அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ஒரு சிறுமி நடம் ஆடியுள்ளார். இதனை பார்த்த அந்த யானை தனது காதுகளை மேலே தூக்கி தலையை ஆட்டியது. அப்போது அங்கு நின்ற ஒரு நபர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓடியுள்ளார்.
இந்த வீடியோவிற்கு தலைப்பாக யார் நன்றாக ஆடியுள்ளனர் என்ற கேள்வியையும் ஐ.பி.எஸ் அதிகாரி கேட்டுள்ளார். இந்த வீடியோ 31. 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். யானைக்கும் சிறுமிக்கும் இடையேயான அந்த இனிமையான தொடர்பை மக்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர். ஒரு மாணவி தொடர்ந்து படித்து வந்ததில் போர் அடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால் இந்த வீடியோவை பார்த்த பின்பு புத்துணர்ச்சி பெற்றது போல் இருந்தது எனக்கு எனவே நன்றி என கூறியுள்ளார்.