சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவபுரி பட்டியில் அமைந்துள்ள தர்மவர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் வடுகபைரவர் உள்ளார். இந்நிலையில் தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. முன்னதாக கோவில் முன்பு ரவி குருக்கள் தலைமையில் சிறப்பு யாக வேள்விகள், 21 வகையான சிறப்பு அபிஷேகம், விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடுகபைரவரை தரிசனம் செய்தனர்.
Categories
வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!
