Categories
மாநில செய்திகள்

பொது இடங்களில் குப்பை கொட்டினால்… ஊராட்சி மன்ற தலைவரின் வித்தியாசமான முயற்சி… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!!

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள காட்டம்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் மொத்தம் ஒன்பது வார்டுகள் இருக்கிறது. இந்த வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை வீட்டிற்கு வந்து சென்று வாங்கிச் செல்ல தூய்மை பணியாளர்கள் இருக்கின்றார்கள். அப்படி இருந்தும் பொதுமக்களில் பலர் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டி செல்கின்றார்கள். இதனை தடுக்கும் விதமாக காட்டம்பட்டி பெண் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன் வித்தியாசமான முறையில் விளம்பர போர்டுகளை பொது இடங்களில் அதாவது குப்பை கொட்டும் இடங்களில் வைத்திருக்கின்றார்.

அதன்படி இந்த போர்டில் போது இடங்களில் குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் குப்பை கொட்டுபவர்களை வீடியோ படம் எடுத்துக் கொடுத்தால் அவர்களுக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நூதன முயற்சியால் அந்த பகுதியில் கடந்த சில தினங்களாக பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவது நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் பேசும்போது, முதற்கட்டமாக நான்கு வார்டுகளில் மட்டுமே இது போன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் தற்போது இதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அதன்படி பொதுமக்கள் இன்னும் ஒத்துழைப்பு வழங்கினால் அனைத்து வார்டுகளிலும் தங்களது தூய்மைப் பணி தொடரும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |