சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள உப்பிலியபட்டி பகுதியில் மரம் வெட்டும் தொழிலாளியான சீரங்கன்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலித்துள்ளார். மேலும் சீரங்கன் சிறுமியை திருமணம் செய்ததாக சைல்ட் லைன் மூலம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் சுகுணாவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி சுகுணா குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சீரங்கனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.