தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11,333இடங்களில் புதன்கிழமை தோறும் கொரோனா உள்ளிட்ட 13 வகை தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்ற சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் , 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இலவச பூஸ்டர் தடுப்பூசி தொடருமா என்பது விரைவில் தெரியவரும்.
அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகள் உட்பட 11,333 இடங்களில் கொரோனா தடுப்பூசி உட்பட 13 வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படும். மேலும் இந்த முகாம்களில் கர்ப்பிணிகள்,பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ளவர்களுக்கு தேவையான அனைத்து தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது. அதனைப் போலவே வியாழக்கிழமைகளில் பள்ளிகளில் தகுதியான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.