Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: திடீர் விலை உயர்வு….. 30% முதல் 40% அதிகரிப்பு….!!!!!

தீபாவளி நெருங்கிவரும் நிலையில் பட்டாசுகளின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர். பட்டாசு தயாரிப்பதில் மிக முக்கியமான இடம் சிவகாசி தான். இங்கு நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளில் 95% பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் 7 சதவீதம் மட்டுமே பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது. மேலும் பட்டாசு தயாரிக்க மூலப்பொருட்கள் 25 முதல் 30% உயர்ந்துள்ளதால் பட்டாசு விலையும் உயர்ந்துள்ளது.

மூலப் பொருட்களின் விலை உயர்வாலும் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளாலும் பட்டாசு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதே சமயம் பல புதிய பட்டாசு வகைகள் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அலாவூதின் அற்புத விளக்கு போல தோற்றமளிக்கும் ஜீபூம்பா பட்டாசு இந்த ஆண்டின் புதிய வரவு.

Categories

Tech |