ஐஸ்வர்யாவும் தனுஷும் சேர்ந்து வாழ போகிறார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் தனுஷ் புது கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம்.
தனுஷும் ஐஸ்வர்யாவும் சென்ற 2004 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், சென்ற ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்வது என முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. மேலும் இருவரும் திருமண நாளான நவம்பர் 18 ஆம் தேதி மீண்டும் இணையும் அறிவிப்பை வெளியிடுவார்கள் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில், நாம் நல்ல நண்பர்களாக இருப்போம். கணவன்-மனைவி என்கின்ற உறவு வேண்டாம். நான் இப்பொழுதுதான் சுதந்திரமாக இருப்பதாக ஐஸ்வர்யாவிடம் தனுஷ் கூறியிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. அப்பாவிற்காகவும் குழந்தைகளுக்காகவும் மீண்டும் தனுஷுடன் சேர்ந்து வாழ ஐஸ்வர்யா முடிவு செய்த நிலையில் எனக்கு தோழியாக இருப்பாயா என தனுஷ் கேட்டு விட்டாராம். குழந்தைகளுக்காக தனுஷின் நிபந்தனையை ஏற்று மனைவியாக இல்லாமல் தோழியாக இருப்பாரா ஐஸ்வர்யா என்ற கேள்வி எழுந்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.