பெங்களூருவில் இருந்து வயநாட்டுக்கு பேருந்தில் 19 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தியவரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தார்கள்.
பெங்களூருவிலிருந்து கேரளா வயநாடு மாவட்டம் மானந்தவாடிக்கு பயணிகளுடன் கேரள பேருந்து வந்து கொண்டிருந்த பொழுது போலீசார் அங்கு திடீர்னு சோதனை மேற்கொண்டார்கள். அப்பொழுது பயணிகளின் பைகளை திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சந்தேகப்படும் படியாக ஒரு நபர் பேருந்தில் இருந்து இறங்க முயற்சி செய்தார்.
இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்வதில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அவர் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் பணம் கடத்தியதைத்தொடர்ந்து விசாரணை செய்ததில் ஹவாலா பணம் என தெரிவந்தது. இதன்பின்னர் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அசைனார் என தெரிந்தது. மேலும் அவரிடம் இருந்த 19 லட்சத்து 500 ரூபாயை பறிமுதல் செய்து அவர்மீது வழக்கு பதிந்து கைது செய்தார்கள்.