Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எரிந்த வீடுகள்…. 2 மணி நேரம் கழித்து வந்த மின்வாரிய ஊழியர்…. பரபரப்பு சம்பவம்….!!!

கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் பழைய காலனி ஆதிதிராவிடர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு கூரை வீடுகளில் கட்டிமுத்து, ராஜவேல், அஞ்சலை, ரங்கசாமி, சக்திவேல் ஆகியோரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இன்று காலை மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்ட 4 வீடுகளும் பற்றி எரிந்தது. இது குறித்து அறிந்த தீமைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் அனைத்து வீடுகளும் எரிந்து நாசமானது.

மேலும் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, மின் கம்பி அறுந்து கூரை மீது விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் வீடு பற்றி 2 இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தான் ஒரு ஊழியர் வந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |