தமிழக அரசு விலையேற்றத்தை திணிக்கும் முடிவை கைவிட வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக மக்கள் மீது விலையேற்றத்தை திணிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஆவினில் தயாரிக்கப்படும் பால் பொருட்களின் விலையை கடந்த மார்ச் மாதம் திமுக அரசு உயர்த்தி உள்ளது. இந்த விலையேற்றமானது சாதாரண நடுதட்டு மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவிற்கு பின்னடைவை நோக்கி செல்ல வழி கூறும் என பலதரப்பட்ட மக்களிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோரிக்கைகளை திமுக அரசு செவி கொடுத்து கேட்க தயாராக இல்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆவினில் இனிப்பு வகைகளின் விலையையும் உயர்த்தியுள்ளது. குலாப் ஜாமுன், ரசகுல்லா, பால்கோவா உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு 20 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை உயர்த்தி உள்ளது.
இது வர இருக்கின்ற பண்டிகைகளுக்கு ஆவினில் நடுத்தர ஏழை மக்கள் சென்று இனிப்பு வகைகள் வாங்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளது. மேலும் எல்லாவற்றிற்கும் தாங்களாகவே விலையை ஏற்றிவிட்டு மத்திய அரசு கூறியதால் ஏற்றினோம் என பொய் பிரச்சாரங்களை செய்யும் திமுக அரசு தமிழக மக்களின் மீது திணிக்கும் இந்த விலையேற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என கே அண்ணாமலை தெரிவித்துள்ளார்.