Categories
உலக செய்திகள்

தைவானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. சுனாமி எச்சரிக்கை…. பீதியில் மக்கள்….!!!

தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9:30 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 2.44 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தைடுங் நகருக்கு வடக்கே ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.இதன் எதிரொலியாக தைவான் அருகே உள்ள தொலைதூரத் தீவுகளுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்று நான்கு மணி அளவில் ஒரு மீட்டர் உயர அலைகள் எழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |