Categories
தேசிய செய்திகள்

லிப்ட் கதவுகளுக்கு இடையே மாட்டிக்கொண்ட ஆசிரியர்…. நொடியில் நேர்ந்த சோகம்….!!!!

மும்பையிலுள்ள பள்ளி ஒன்றில் லிப்ட் கதவுகளுக்கு இடையே ஆசிரியர் ஒருவர் சிக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வடக்கு மும்பை புறநகர் பகுதியான மலாடிலுள்ள சிஞ்சோலி பண்டரில் இயங்கிவரும் புனித மேரி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் இச்சம்பவம் அரங்கேறியது. ஆசிரியை ஜெனல் பெர்னாண்டஸ் என்பவர் சென்ற வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் 2வது மாடியிலுள்ள பணியாளர் அறைக்கு செல்வதற்காக 6வது மாடியில் லிப்ட் வரும் வரை காத்திருந்தார். லிப்டில் ஆசிரியை நுழைந்ததும் அதன் கதவுகள் அவருடன் சேர்த்து இறுக்கமாக மூடிக்கொண்டது.

அத்துடன் லிப்ட் திடீரென்று மேல்நோக்கி நகரத் தொடங்கியது. அப்போது அவரது ஒருகால் லிப்டிற்குள்ளும், உடல் வெளியேயும் மாட்டிக்கொண்டது. அதன்பின் லிப்ட் நகர ஆரம்பித்தது. இதனிடையில் அவர் கதவுகளின் இடையே சிக்கிக் கொண்டார். அவரது அலறல் சத்தம்கேட்டு பள்ளி ஊழியர்களும், குழந்தைகளும் ஓடிவந்து உதவி செய்தனர். மேலும் இதுபற்றி தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புபடையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெர்னாண்டசை மீட்டனர்.

இந்த விபத்தில் அவர் படுகாயமடைந்தார். அதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்த ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் லிப்ட் செயல்பாடுகளை பராமரிப்பு செய்யும் நிறுவனம் மீது விசாரணை மேற்கொள்ளபடும் என தெரிவிக்கப்பட்டது. அந்த ஆசிரியை இந்த வருடம் ஜூன்மாதம் தான் அப்பள்ளியில் உதவி ஆசிரியையாக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |