திருவண்ணாமலை அருகே கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியை அடுத்த பட்டியல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வீரகங்கா இவர்கள் மகன் மற்றும் மருமகள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட அவர்களது மகளும் இவர்களது பேத்தியும் ஆன மகேஸ்வரியை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயராமன் தங்களது விவசாய நிலத்தில் யாருடைய எதிர்பார்ப்புமின்றி சுயமாக உழைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் 96 வயதான ஜெயராமன் வயது முதிர்ந்ததன் காரணமாக நேற்றைய தினம் இரவு 12 மணி அளவில் இயற்கை எய்தினார். இதை கண்டு அதிர்ந்துபோன அவரது மனைவி வீர கங்கா கணவனின் உடலை கட்டியணைத்து கதறி அழுதுள்ளார். இந்நிலையில் கணவனின் உடலை கட்டி அணைத்தபடியே 2 மணி அளவில் அவரும் இறந்துள்ளார். 60 ஆண்டு காலமாக இணைந்து வாழ்ந்த தம்பதியினர் சாவிலும் ஒன்றாகவே ஒருங்கிணைந்து சென்ற சம்பவம் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மத்தியில் சோகத்தையும் நெகழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.