பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என மணிரத்னம் கூறியுள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்ற செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் என பலர் கலந்து கொண்டார்கள். இத்திரைப்படத்தின் ப்ரொமோஷன் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் அண்மையில் இத்திரைப்படம் குறித்து பேசிய மணிரத்தினம், பொன்னியின் செல்வன் படத்தில் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என கூறியுள்ளார். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகிய ஆறு மாதம் முதல் ஒன்பது மாதத்திற்குள் இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறியுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.