Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.1000 கோடி ஊழல்…! அந்த வெல்லம் அமெரிக்காவுல கூட கண்டுபிடிச்சது இல்ல….. சி. வி சண்முகம் வார்னிங்….!!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக செயல்படவில்லை முடங்கி விட்டது என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இன்றும் உள்ள 234 தொகுதிகளிலும் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடி வரும் ஒரே கட்சி அதிமுக தான். அண்ணா என்று கூறும் திமுக ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்தவில்லை. இதுதான் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் ஒரே வித்தியாசம். தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி அடுத்து உயர போகும் கட்டணம் பேருந்து கட்டணம் ஆகும். பொங்கல் பரிசில் கொடுக்கப்பட்ட வெல்லம். இதே போன்ற அமெரிக்காவில் கூட கண்டுபிடித்தது கிடையாது. அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்து செய்த முதல் ஊழல் அதுதான். அது கண்டித்து அதிமுக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்த வழக்கில் தொடர்ந்து வாய்தா வாங்கி வரும் திமுக அரசை என்று பிடிக்க வேண்டுமோ அன்று நாங்கள் பிடிப்போம் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |