Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல்… திமுக திடீர் அறிவிப்பு…. செப்..25 முதல் வேட்புமனு தாக்கல்….!!!!

திமுக 15 வது பொது தேர்தலில் மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்பு மனு தேதியை தலைமை கழகம் அறிவித்துள்ளது. மாவட்ட அவை தலைவர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்,பொருளாளர் பதவிகளுக்கு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது.நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் அமைச்சர்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் மாவட்ட செயலாளர்களை நீக்கி தனக்கு வேண்டிய நபர்களை அந்த பதவியில் அமர வைக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பதவிகளுக்கு போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து 25 ஆம் தேதிக்குள் பொறுப்பு ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாக தலைமை அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.மேலும் வேட்பு மனு விண்ணப்ப படிவம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தி தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |