ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு ஆதிசுவாமிநாத சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரகரம் பகுதியில் கந்தநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆதிசுவாமிநாதசாமிக்கு தனி சன்னதி இருக்கிறது. இந்நிலையில் ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு ஆதிசுவாமிநாதசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து விழாவில் ஆதிசுவாமிநாதசாமிக்கு திரவியப் பொடி, மஞ்சள்பொடி, பழங்கள், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம், விபூதி ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.