தசரா மற்றும் தீபாவளி என பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் விமான கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சாதாரண நாட்களில் டெல்லியில் இருந்து பாட்னா செல்ல விமானத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் தற்போது இதே வழித்தடத்தில் சுமார் 13,000 வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனைப் போலவே நாட்டின் பிற நகரங்களில் இருந்து டெல்லி செல்வதற்கான விமான கட்டணங்களும் கடுமையாக உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக பாட்னா, லக்னோ, கோரக்பூர், தியோகர், தர்பங்கா, வாரணாசி போன்ற நகரங்களுக்கான டிக்கெட்டுகளை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.