இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் குற்றவாளிகள் இன்னும் அந்த தவறை செய்யத்தான் செய்கிறார்கள். பாலியல் வன்கொடுமைகள் குற்றம் குறைந்த பாடு இல்லை.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்த சிறுமி ஒருவரை அதே பகுதியை சேர்ந்த 2 பேர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அடித்து தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த சிறுமியை மருத்துவமனை அழைத்துச்சென்ற போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே இதே லக்கிம்பூர் பகுதியில் 2 தலித் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மரத்தில் சடலமாக தொங்க விடப்பட்டனர்.