Categories
தேசிய செய்திகள்

Shocking : இந்தியாவில் 18% பெண்களுக்கு… உஷார்….. மருத்துவர்கள் எச்சரிக்கை…..!!!

புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவது குறித்த புற்றுநோய் மருத்துவ நிபுணர்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று மதுரையில் நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் கூறுகையில்,இந்தியாவில் சராசரியாக 18 சதவீதம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, உணவு பழக்க வழக்க மாற்றம், பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் மார்பக புற்று நோய் ஏற்படுவதாக கூறுகின்றனர். இதனை தடுக்க உணவு பழக்க வழக்கங்களை மீண்டும் பாரம்பரிய முறையில் மாற்ற வேண்டுமென்றும் ஆரம்ப நிலையில் கண்டறிய பெண்கள் அடிக்கடி மார்பக புற்றுநோய் குறித்து சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |