Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்து கர்ப்பமாக்கிய கிழவன்”…. கோர்ட் அதிரடி…!!!!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாகிய முதியவருக்கு 20 வருடம் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கே.கே மட்டம் பகுதியைச் சேர்ந்த புச்சித்தன் என்ற கன்னட தாத்தா சென்ற 2020 ஆம் வருடம் எட்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி விளையாடுவது போல பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கின்றார். இதனிடையே பள்ளி மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பெற்றோர் மாணவியிடம் இது பற்றி கேட்டுள்ளார்கள்.

அப்பொழுது சிறுமி முதியவர் பாலியல் தொல்லை தந்ததாக கூறியதை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. மேலும் மாணவிக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்த வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 வருடம் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

Categories

Tech |