சுகாதாரத்துறை மந்திரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சூக் மாண்டாவியா டெல்லியில் வைத்து நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். நமது இந்தியாவில் காச நோயினால் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வருகின்ற 2025 -ஆம் ஆண்டுக்குள் காசநோய் முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் பேரில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. காச நோயை தனிநபர் மற்றும் சமூக பங்களிப்புகள் மூலம் நமது நாட்டில் இருந்து ஒழித்து விடலாம்.
அவர்களுக்கு சத்தான உணவு, மருத்துவ சிகிச்சைக்கான மருந்து ஆகியவற்றை தொழில் சார்ந்த உதவிகள் செய்யும் வகையில் தத்தெடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு 9 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களில் 8 லட்சம் பேர் அரசு சாரா அமைப்புகள், தனி நபர்கள், சுய உதவி குழுக்கள், மக்கள் பிரதிநிதிகள் மூலமாக தத்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒரு லட்சம் பேரையும் விரைவில் தத்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் இன்று முதல் வருகின்ற அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வரை இந்தியா முழுவதும் ரத்த தான முகாம்கள் நடைபெறுகிறது. இதனையடுத்து உக்ரைனில் தங்களது மருத்துவ படிப்பினை பாதியிலே விட்டு விட்டு வந்த மாணவர்கள் இந்தியாவில் தங்களது படிப்பை தொடர முடியாது. வெளிநாட்டு மாணவர்களுக்கான நுழைவு தேர்வினை எழுதி அதில் அவர்கள் தேர்ச்சி பெற்று இந்தியாவில் மருத்துவ பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நிபுணர்கள் இன்று வரை அனுமதி வழங்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் அதில் கூறியுள்ளார்.