Categories
உலக செய்திகள்

பள்ளி வேன் மீது மோதிய லாரி….. கண்ணிமைக்கும் நேரத்தில் பலியான 19 குழந்தைகள்….!!!!!

பள்ளி வேன்மீது லாரி மோதிய விபத்தில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாபிரிக்கா நாட்டின் குவாஸ்லு நடால் மாகாணத்தில் ஆரம்பப்பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் வகுப்பை நிறைவு செய்துவிட்டு மாலை குழந்தைகள் பள்ளி மினி வேனில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனில் 19 குழந்தைகள் ,வேன் டிரைவர், உதவியாளர் என 21 பேர் பயணித்தனர்.

நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பள்ளி வாகனம் மீது சாலையின் எதிரே வந்த சரக்கு லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |