பிரபல நாட்டில் முதல் முறையாக குரங்கு அம்மை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் நோயை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் நேற்று சீனாவிற்கு ஏராளமான பயணிகள் விமானம் மூலம் வந்துள்ளனர். இப்போது அவர்களை கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அதில் ஒருவருக்கு தோல் அரிப்பு போன்ற பாதிப்பு இருந்துள்ளது.
இதனையடுத்து அந்த நபரை அங்கிருந்து தனிமைப்படுத்தி பரிசோதனை செய்துள்ளனர். அந்த பரிசோதனையில் அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது . சோங்கில் நகருக்கு வந்தவுடன் அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டதால் வைரஸ் பரவும் ஆபத்து குறைவாக உள்ளது. மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என கூறியுள்ளனர்.