பாஜகவை ஜெயிக்க விடக்கூடாது. அதற்காக நாமெல்லாம் ஒன்றுசேர வேண்டும். நமக்குள் இருக்கும் பகையை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என சீமானுக்கு திருமாவளவன் அறிவுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்த சீமான்,எங்களுக்கு எல்லா கட்சிகளோடும் முரண்பாடு இருக்க செய்கிறது. ஆனாலும் நாங்கள் ஏன் சேர்கிறோம். பகைவர்கள் பலர் இருக்கலாம் அதில் முதலில் காலி செய்ய வேண்டியது யாரை என்பது பார்க்க வேண்டும். எனக்கு திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம், காங்கிரசும் வேண்டாம், பிஜேபியும் வேண்டாம். இப்படி எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு எண்ணத்தை சாதிக்க போகிறீர்கள்? இதைவிட முட்டாள் தனமான முடிவு வேறு எதுவும் இருக்காது.
“அண்ணன் சொல்றது சரிதான். ஆனால், நீங்கள் ஏற்கனவே சொன்னதை மறக்கவில்லை. நாலு சீட்டுக்கு நடையாய் நடக்க வேண்டி உள்ளது. மண்டியிட வேண்டியது உள்ளது. கெஞ்ச வேண்டியது உள்ளது என்று சொன்னீர்களே? அண்ணன் பட்ட அந்த கஷ்டத்தை நானும் பட வேண்டுமா? அந்த அசிங்கத்தை நானும் படணுமா? அவரால் முடியாது என்றால் இருக்கட்டும். தம்பி நான் போராடி பார்க்கிறேன். கெஜ்ரிவால் பஞ்சாபிலும், டெல்லியில் போராடி வெற்றி பெறவில்லையா?வெற்றி பெற முடியாது என்று சொல்லக்கூடாது. தம்பியாலும் முடியும் நான். இப்ப சொல்றேன் 2024 தேர்தலிலும் தனித்து தான் இருப்பேன். 2026 தேர்தலிலும் தனித்து தான் நிற்பேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.