தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கௌதம் மேனனுடன் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக சிம்பு தன்னுடைய உடல் எடையை 20 கிலோ வரை குறைத்துள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி பாசிட்டிவ்வான விமர்சனங்களை குவித்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் சிம்பு கௌதம்மேனனுடன் இணைந்து பணியாற்றியது தொடர்பாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கௌதம் மேனன்ம் ஒரு ஆக்ஷன் கதையை கூறினார். அந்த கதையின் தலைப்பு சுறா. நான் அப்போது காதல் படத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருந்ததேன். என்னுடைய ஆர்வத்தை கௌதம் மேனனிடம் நான் கூறினேன். அதன் பிறகு தான் விண்ணைத் தாண்டி வருவாயா கதையை என்னிடம் கூறினார். அந்த கதையை கேட்ட உடன் படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன் என்றார். மேலும் நடிகர் விஜய் சுறா என்ற தலைப்பில் தன்னுடைய 50-வது திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.