நேபாளத்தில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 13 நபர்கள் பலியானதாகவும் 10 நபர்கள் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேபாள நாட்டின் மேற்கு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் அச்சாம் என்னும் மாவட்டத்தில் 13 நபர்கள் பலியாகினர். மேலும் 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. 7 நபர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். எனவே, அவர்களை மீட்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
தற்போது, மாயமானவர்களில் 10 நபர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ள 10 பேரை கண்டுபிடிக்க மீட்பு படையினர், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் .