நடிகை மீனாவின் கணவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்ற ஜூன்மாதம் இறந்தார். இளம் வயதிலேயே அவரது மரணம் சினிமாதுறையினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அவரது இறுதிச்சடங்கிற்கு ரஜினி உட்பட பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் வந்திருந்தனர். இதற்கிடையில் மீனா எப்போதாவது அவரது தோழிகள் ரம்பா, சங்கவி, சங்கீதா உள்ளிட்ட நடிகைகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
கணவர் மறைவுக்கு பின் மீனா தோழிகளுடன் வெளியில் சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் நேற்று மீனாவின் பிறந்தநாள் ஆகும். இதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறினர். தற்போது மீனா, அவரது தோழிகள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Meena Birthday celebration pic.twitter.com/tdWZubeIwJ
— Parthiban A (@ParthibanAPN) September 16, 2022