Categories
தேசிய செய்திகள்

சூப்பர் நியூஸ்…! +2 தேர்ச்சிபெற்றவர்களுக்கு….. இனி சான்றிதழுடன் டிரைவிங் படிக்க பயிற்சி….!!!!

கேரளா போக்குவரத்து துறை பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்களுக்கு மேல்நிலை சான்றிதழோடு வாகனம் ஓட்டுவதற்கான கற்றல் உரிமம் வழங்க திட்டமிட்டுள்ளது. மேல்நிலை வகுப்புகளில் சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை பாடமாக மாற்றும் திட்டமும் உள்ளது. இது குறித்த பாடத்திட்ட அறிக்கையைப் போக்குவரத்து துறை அடுத்த வாரம் கல்வித்துறையிடம் ஒப்படைக்கும். அரசு ஒப்புதல் அளித்தால் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசை அணுகும். தற்போது டிரைவிங் கற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் கற்றல் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் கற்றல் உரிமைக்கு தேவையான அனைத்தையும் கற்பிக்கப்படும்.

இதற்கு தேவையான பாடத்திட்டம் போக்குவரத்து ஆணையர் தலைமையில் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் துறைக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். ஒன்று கற்றல் சான்றிதழ் பெறுவதில் தற்போது நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி. மற்றொன்று சாலை விதிகளை குறித்த விழிப்புணர்வை மாணவர்களுடைய ஏற்படுத்தவும் உதவும். அரசின் ஒப்புதல் கிடைத்தால் மத்திய வாகன சட்டத்திலும் மாற்றம் செய்ய வேண்டும். இதுபோன்ற விஷயங்களுக்கு மத்திய அரசை அணுக போக்குவரத்து துறை முடிவு செய்தது.

Categories

Tech |