Categories
தேசிய செய்திகள்

யானை தந்தத்தில் வடித்த சிலை….. மாறுவேடத்தில் சென்று அதிரடி காட்டிய வனத்துறையினர்….!!!!

இடுக்கி அருகே யானை தந்ததில் வடித்த சிலைகளை விற்க முயன்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இடுக்கி மாவட்டம், தொடுபுழா பகுதியில் யானை தந்தத்தில் உருவாக்கிய இரண்டு சிலைகளை சிலர் விற்பனை செய்ய முயன்றதாக தகவல் வெளியானது. இந்த தகவலின் பெயரில் அந்த கும்பலை பிடிப்பதற்கு வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். வனத்துறை நடத்திய விசாரணையில் தொடுபுழா பகுதியை சேர்ந்த ஜோன்ஸ், குரிய கோர்ஸ் ,கிருஷ்ணன் ஆகியோர் இந்த சிலையை விற்பனை செய்ய முயற்சிததாக தெரியவந்தது.

இதை தொடர்ந்து மூன்று பேர்கள் இடம் அந்த சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல் வனத்துறையினர் மாறுவேடத்தில் அணுகினார்கள். சிலையை பார்க்க வேண்டும்,  விலைக்கு வாங்கிக் கொள்வதாக வனத்துறையினர் கூறியுள்ளனர். இதை நம்பி மூன்று பேரும் அந்த சிலைகளை வனத்துறையினர் என்று தெரியாமல் கொடுத்துள்ளனர். அப்போது அந்த இரண்டு சிலைகளை கைப்பற்றிய வனத்துறையினர் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த மூன்று பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |