வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்ததால் விருப்பமில்லாத மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் நாயக்கன்கொட்டாய் சேர்ந்தவர் வாசுகி. இவர் சேலத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி கணிதம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் வாசுகியின் திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர்.
இதனை அறிந்து எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் என கூறி வந்துள்ளார் வாசுகி. ஆனால் மகளின் பேச்சை ஏற்காத பெற்றோர் ஏற்பாடுகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த வாசுகி தனது வீட்டின் அருகில் இருந்த கிணறு ஒன்று குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கிருஷ்ணாபுரம் காவல் துறையினர் விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.