தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் பிரபலமானவர் துல்கர் சல்மான். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹேய் சினாமிகா படங்களில் வெற்றி அவருக்கு திறப்பு முனையாக இருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி சமீபத்தில் திரைக்கு வந்த சீதாராமம் படம் மூலம் திறமையான நடிகர் என்ற பெயர் பெற்றார். இருப்பினும் துல்கர் சல்மான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த சில மலையாள படங்கள் சரியாக போகாததால் கேலி மற்றும் அவமதிப்புகளை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டேன். எனக்கு நடிக்க தெரியவில்லை என்றும் சினிமாவை விட்டு வெளியேறும்படி விமர்சித்தனர். எனது தந்தை மம்மூட்டியை போன்று என்னால் சினிமாவில் நிலைக்க முடியாது என்று பேசினர். அதே பொருட்படுத்தாமல் என்னை நம்பி கடுமையாக உழைத்து, இப்போது இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.