Categories
மாநில செய்திகள்

தீண்டாமை அவலம்! உங்களுக்கு தின்பண்டம் தரமுடியாது…. வீட்ல போய் சொல்லுங்க…. சிறுவர்களுக்கு அரங்கேறிய கொடூரம்….!!!!

சங்கரன்கோவில் அருகில் பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை அவலம் என பரவும் வீடியோ பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் பெரும்புத்தூர் பஞ்சாயத்து பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பள்ளி சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க முடியாது எனக்கூறும் ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தின்பண்டம் வாங்குவதற்காகக் கடைக்கு வருகின்றனர்.

இந்நிலையில் கடை உரிமையாளர், ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதாகவும், இனி உங்களுக்கு தின்பண்டம் தரமுடியாது எனவும் வீட்டில் சென்று இதை சொல்லுமாறும் கூறுகிறார். சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிரப்படும் இந்த வீடியோ பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |