Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தொடரும்….. வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |