இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தின் போது விமான சேவைகளால் ஏற்படும் சத்தத்தை குறைப்பதற்காக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்காக லண்டனில் உள்ள ஹித்ரோ விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் 100 விமானங்கள் திங்கட்கிழமை ரத்து செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து மற்ற விமானங்களின் அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளது. இது ராணி எலிசபத்தின் நினைவாக செய்யப்படுகின்றது.
அதன்படி திங்கட்கிழமை காலை 11.40 மணி முதல் மதியம் 12.10 மணி வரை விமான நிலையத்தில் விமானங்கள் எதுவும் இயங்காது.விமானங்களின் சத்தம் 10 நிமிட மௌனம் உள்ளிட்ட இறுதி சடங்குகளை பாதிக்காத வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியம் 1:45 மணி முதல் 35 நிமிடங்களுக்கு ஹீத்ரோவில் எந்த விமானமும் தரையிறங்காது.மேலும் இரவு ஒன்பது மணி வரை சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் இருப்பதால் 15 சதவீத விமான சேவைகள் நேரத்தால் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.