Categories
தேசிய செய்திகள்

பல வருடம் நிலுவையில் இருந்த வழக்குகள்…. உச்சநீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு….!!!!

உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை குறைக்கும் நடவடிக்கையாக ஒரே சமயத்தில் 13 ஆயிரத்து 147 பழைய வழக்குகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற பதிவாளர் சிராக் பன்னுசிங் நேற்று முன்தினம் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இவ்வழக்குகள் கடந்த 2014 ஆம் வருடத்திற்கு முன் தாக்கல் செய்யப்பட்டவை ஆகும். இதில் 1987 ஆம் வருடம் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் அடங்கும்.

இவற்றுக்கு டைரிஎண் அளிக்கப்பட்டிருந்தது. எனினும் வழக்குகள் பதிவுசெய்யப்படவில்லை. மனுவிலுள்ள குறைபாடுகளை சரிசெய்யுமாறு மனுதாரர்களிடம் கூறப்பட்டிருந்தது. ஆனால் பல வருடங்கள் ஆன போதிலும் அவர்கள் குறைபாடுகளை சரிசெய்யவில்லை. ஆகவே விதிமுறைப்படி அவ்வழக்குகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளதாக சிராக் பன்னுசிங் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |