Categories
உலக செய்திகள்

மின்னல் தாக்கியது கூட தெரியாமல்…. வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்….. இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு…..!!!!

வீட்டில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த நபரை மின்னல் தாக்கியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் அபிங்டனில் எய்டன் ரோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 33 வயதாகிறது. இவர் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் தனது ப்ளே ஸ்டேஷனில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது உரத்த வெடி சத்தம் கேட்டுள்ளது. மேலும் அவர் தனது உடலில் ஒரு கடினமான உணர்வை உணர்வையும் உணர்ந்துள்ளார். இதனால் அவர் ஜான் ராட்க்ளிஃப் என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எய்டனுக்கு மின்னல் தாக்கியது போல் தெரிகிறது என்று கூறியுள்ளனர்.

இதனால் அவர் சுமார் 8 மணி நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் மருத்துவமனைக்கு வந்த போது அவருடைய இதயத்துடிப்பு ஒழுங்கற்றதாக இருந்துள்ளது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து சிகிச்சைக்கு பின்னர் சில மருந்துகளுடன் அவர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து எய்டன் கூறியதாவது “நான் சோபாவில் அமர்ந்து கேம் விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் வெளியே பலத்த சத்தத்துடன் இடி இடித்து கொண்டிருந்தது. இதனால் நான் மிகவும் கடினமாக உணர்ந்தேன்.

https://www.instagram.com/stormstruckcosplay/?utm_source=ig_embed&ig_rid=d54b540a-55db-4cfb-9d6a-435be9e6819f

அதன் பின்னர் என்னுடைய வலது கையில் தீக்காயங்களும் இருந்தது. மேலும் நிலத்தினுடைய கடினத்தன்மையின் மீது வெப்பமான வானிலை தாக்கத்தின் காரணமாக மின்னல் தண்ணீரில் இருந்தோ அல்லது ஜன்னல் வழியாகவோ தாக்கி இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மருத்துவமனையில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் அவர் “மீண்டும் ஒரு இடியுடன் கூடிய மலையின் போது வீடியோ கேம்ஸ் விளையாட போவதில்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.

Categories

Tech |