Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் வழக்கு”… 4 பேர் கைது….!!!!!

குவைத்தில் கூத்தாநல்லூரை சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூரில் இருக்கும் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபாயை ஒருவரிடம் இருந்து கடனாக வாங்கி ஹைதராபாத் சேர்ந்த நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்று இருக்கின்றார். அவரிடம் கிளினிக் வேலை அல்லது சேல்ஸ்மேன் வேலை வாங்கி தருவதாக குவைத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.

ஆனால் அங்கு சென்ற முத்துக்குமரனுக்கு பணக்கார ஒருவரின் வீட்டிற்கு அனுப்பி பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுக்கப்பட்டது. முத்துக்குமரன் தான் எதிர்பார்த்த வேலை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஒட்டகம் மேய்க்க சொல்கின்றார்களே என மனம் உடைந்தார். மேலும் தனது மனைவி வித்யாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கதறி கதறி அழுதார். இந்த நிலையில் முத்துக்குமரன் தனது முதலாளியிடம் ஒட்டகம் மேய்க்கும் வேலை செய்ய எனக்கு கஷ்டமாக இருப்பதாகவும் தான் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதாகவும் கூறியிருக்கின்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முதலாளி முத்துக்குமாரை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார். இதைத் தொடர்ந்து முத்துக்குமரன் இந்திய தூதரத்தை தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கின்றார். இதை அறிந்த அந்த முதலாளி முத்துக்குமாரனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக சொல்லப்படுகின்றது. குவைத் பத்திரிக்கை சேனல் ஒன்றில் 24 வயது குவைத் பிரமுகர் 30 வயது மதிப்புதக்க நபரை சுட்டுக் கொன்றதாக செய்தி வெளியானது. இதன் பிறகு விசாரணை குழுவினர் விசாரணை செய்ததில் தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பது சுட்டுக் கொல்லப்பட்டது உறுதியானதாக சொல்லப்படுகின்றது.

இந்த நிலையில் குவைத்தில் முத்துக்குமரன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குவைத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஏஜென்ட் மோகனா, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் என நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்துக்குமர்னின் உடல் கொண்டுவரப்பட்டு நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

Categories

Tech |