பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவியான மேகன், மீண்டும் நாடு திரும்ப தயாராகலாம் என்று அரச குடும்பத்தின் ஒரு நிபுணர் கூறியிருக்கிறார்.
அரச குடும்பத்தின் நிபுணரான நீல் சீன், மக்களின் அதிக அன்பால் மேகன் மீண்டும் பிரிட்டன் நாட்டிற்கு வரலாம் என்று கூறியிருக்கிறார். நாட்டின் இளவரசரான ஹாரி அமெரிக்க நாட்டை சேர்ந்த மேகன் மெர்க்கலை திருமணம் செய்து கொண்டு சில நாட்களில் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து அமெரிக்காவில் குடி பெயர்ந்து விட்டார்.
இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில், அதன் பிறகு அவர்களுக்குள் விரிசல் உண்டானது. பல வருடங்களாக அரச குடும்பம் சார்ந்த எந்த விழாக்களிலும் இருவரும் சேர்ந்து காணப்படவில்லை. இந்நிலையில், பிரிட்டன் மகாராணியார் மரணமடைந்ததை அடுத்து, இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி, இளவரசிகள் கேட் மற்றும் மேகன் ஆகிய நால்வரும் ஒரே வாகனத்திலிருந்து இறங்கி வந்தனர்.
அதனை பார்த்த மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். எனவே, மேகன் மெர்க்கலுக்கு மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதனால், நாட்டு மக்கள் தன்னை விரும்புவதால் மீண்டும் அவர் பிரிட்டனுக்கு திரும்பலாம் என்று நீல் சீன் கூறியிருக்கிறார்.