Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…வாய்ப்புகள் கைகூடி வரும்…செலவுகள் அதிகரிக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று சுமாரான பணவரவு வந்தாலும் மன சஞ்சலங்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கும் கூட்டாளியின் போக்கு எரிச்சலூட்டும் விதமாக இருக்கும். சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும்.

உங்களுடைய செயல்திறன் இன்று அதிகரிக்கும். செய்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று  கொஞ்சம் பொறுமையாகவும், வாக்குவாதங்கள் இல்லாமலும் நடந்து கொண்டாலே போதுமானதாக இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். சக மாணவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று மேற்கல்வி காண முயற்சியில் ஈடுபட்டால் நல்ல முன்னேற்றமும் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு  அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |