Categories
உலக செய்திகள்

இலவச கடை தொடர்பான பிரான்ஸின் சோதனை முயற்சி தொடக்கம்… எந்த ஒரு பொருளையும் வீணாக்க கூடாது எனும் கொள்கை…!!!!!!

இலவச கடைகளை திறப்பது தொடர்பான பிரான்ஸ் சோதனை முயற்சி ஒன்றை தொடங்க இருக்கிறது. வழக்கமான பல்பொருள் அங்காடிகள் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கின்ற கடைகளின் கொள்கை பண்டமாற்று மற்றும் மறுசுழற்சி என்பதாகும். இந்த கடைகளில் சிறப்பு என்னவென்றால் மக்கள் தங்களிடம் உள்ள பழைய பொருட்களை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக புதிய பொருட்களை வாங்கி செல்லலாம். அதுவும் இலவசமாக. இந்த நிலையில் பெரிய அளவில் smicval market என அழைக்கப்படும் இந்த கடைகளை திறக்க பிரான்ஸ் திட்டமிட்டு வருகின்ற சூழலில் தற்போது ஏழு சிறிய கடைகள் முதலில் திறக்கப்பட்டிருக்கிறது. மூன்று பெரிய கடைகளை திறக்கும் திட்டமும் இருக்கிறது மேலும் உணவுப் பொருட்கள் மட்டும் இங்கு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |