மீனம் ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாகத்தான் இருக்கும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரம் பதவியும் கிடைக்கும். வீட்டில் வசதி வாய்ப்புகளும் இருக்கும். இன்று செல்வம் சேரும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குறையும். உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.
பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நல்ல சிந்தனை உதிக்கும். மனோபலம் கூடும், சாதுரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகளும் நீங்கள் சந்திக்கக்கூடும். இன்று கணவன் மனைவிக்கு இடையே நெருக்கமான அன்பு இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாகத்தான் இருக்கும்.
அதுமட்டுமில்லை மாணவ செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமும், இருந்த தடையும் விலகிச்செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: -தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் வெள்ளை நிறம்