திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து ஒரு மாதமான குழந்தைக்கு மதுவை கொடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழந்தைக்கு மட்டுமல்லாமல் அவரும் அந்த மதுபானத்தை குடித்தார். இதை பார்த்த அப்பகுதி வியாபாரிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை விசாரித்தபோது அந்த குழந்தை பிறந்து 15 நாள் ஆவதாகவும், தான் கரூரில் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் குழந்தையை வாங்கி பார்த்த போது குழந்தை மயக்கத்தில் இருந்தது. பின்னர் குழந்தையை மீட்ட போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி சிகிச்சை செய்தனர். 2 கிலோ 600 எடை கொண்ட அந்த ஆண் குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள் தான் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். போதையில் இருந்த அந்த பெண் தனது குழந்தை தான் அது என்று கூறிக்கொண்டு தள்ளாடி கீழே விழுந்தார். 50 வயது மதிப்பு மிக்க அந்த பெண்தான் குழந்தையின் உண்மையான தாயார் என்று சந்தேகம் ஏற்பட்டது. அவர் வைத்திருந்த பையில் வேறு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.