Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு…… அடுத்த மாதம் முதல்…… வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு என்பது அவசியமானது. இந்த தேர்வில் கேட்கப்படும் பாடத்திட்டங்களை தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் 12-ம் வகுப்பு அரசு பாடத்திட்டங்களை தேசிய அளவுக்கு உயர்த்துவதிலும் சிக்கல் உள்ளது. நீட் தேர்வினால் தமிழகத்தில் பல மரணங்கள் நடந்து வருகின்றது. ஏனைய மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது கனவாக இருக்கக் கூடாது என்று கருதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சிகளை அளித்து வருகின்றது.

அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீட் பயிற்சி வகுப்புகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த ஆண்டில் முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளனர். தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட நீட் பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |