உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்னும் பெயரில் ரஷ்யா தொடங்கிய போரானது ஆறு மாதங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரைனுக்கு உதவும் விதமாக ஏற்கனவே அனுப்பப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களை சேர்த்து கூடுதலாக ராணுவ ஆயுத உதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி உக்கிரைனுக்கு 600 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்திருக்கிறது. மேலும் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனியர் ராணுவத்தின் உதவுவதற்காக இந்த நடவடிக்கை பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமெரிக்க அதிகாரிகள் வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளனர். ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது. வெள்ளை மாளிகை இதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. மேலும் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமான ராணுவ உதவி அமெரிக்கா வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Categories
“உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ ஆயுத உதவி வழங்க போகின்றோம்”… பிரபல நாடு திட்டம்…!!!!!
