டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் பக்கர் ஜமான் இடம்பெறாததற்கு ரசிகர்கள் தேர்வுக்குழுவை சாடி வருகின்றனர்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கின்றது.. இந்த தொடருக்கான அணியை ஆஸ்திரேலியா, வங்கதேசம், இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகள் அறிவித்து விட்டது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணியை பாகிஸ்தான் அணியும் நேற்று அறிவித்தது.
பாபர் அசாம் தலைமையில் 15 வீரர்கள் கொண்ட உலகக் கோப்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆசியக் கோப்பையில் இடம்பெற்ற வீரர்களே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளனர்.. மேலும் புதிதாக டாப்-ஆர்டர் பேட்டர் ஷான் மசூத் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல முதன்முறையாக வேகப்பந்து வீச்சாளர்களான முகமது வாசிம் ஜூனியர் இடம்பெற்றுள்ளார்..
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடாமல் இருந்த ஷாஹீன் ஷா அப்ரிடி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலத்தை அளிக்கிறது. அதேநேரத்தில் பக்கர் ஜமான் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.. நடந்து முடிந்த ஆசியக்கோப்பை தொடரில் அவர் சரியாக ஆடாதது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
Ek tournament main fail kya ho gaya team se hee nikaal diya 🥺 #FakharZaman pic.twitter.com/1mtjFg1E0V
— 𝘼𝙙𝙚𝙚𝙡 (@Jimmy__90) September 15, 2022
இந்நிலையில் 15 பேர் கொண்ட அணியில் ஃபகர் ஜமானை சேர்க்காததற்காக பாகிஸ்தான் தேர்வாளர்களை ட்விட்டரில் கடுமையாக சாடத் தொடங்கினர். அவரது ஆசியக்கோப்பை செயல்திறன் அடிப்படையில் அவரை தேர்வு செய்யப்படவில்லை என்றால், இப்திகார், குஷ்தில் ஆசிப் அலியும் அதே பிரிவில்தான் நிற்கின்றனர். நமது கேப்டன் கூட அந்த தொடரில் சரியாக ஆடவில்லை என விமர்சித்து வருகின்றனர்.
Including @shani_official in t20 Wc is great, but we can't go with rizwan,babar&Shan at the same time.#FakharZaman isthe only pure hitter who can accelerate innings
Iftikhar,khushdil,asif are lower order batsmen
Lets hope Haider &Shan solve our middle-order issue
#T20WorldCup— Fahad Khalid (@Fahaad9791) September 15, 2022
பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத் மற்றும் உஸ்மான் காதர்.
காத்திருப்பு வீரர்கள் :
ஃபகார் ஜமான், முகமது ஹாரிஸ் மற்றும் ஷாநவாஸ் தஹானி.
If they're dropping him on basis of his #asiacup performance then Iftikhar Khushdil asif also stand in the same category even our captain is standing at the highest rank#FakharZaman@iramizraja@Sikanderbakhts@SYahyaHussaini@FakharZamanLive pic.twitter.com/HFcCGvuJAx
— shawaiz (@shawaizRocks) September 15, 2022
chief slector ki cheap selection 😆
— Mohammad Amir (@iamamirofficial) September 15, 2022